சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என யாரையும் விட்டுவைக்கவில்லை. பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை தொகுதி எம்பியும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில் “எனக்கு அறிகுறிகள் இல்லை. வீட்டில் தனிமையில் இருக்கிறேன்” என புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.