கொரோனா வைரஸ்

"காலர் டியூன்" மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

"காலர் டியூன்" மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

jagadeesh

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இணைந்துள்ளன.

இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்போது, பொதுமக்கள் இருமும்போதும் தும்மும் போதும் டிஷ்யூ மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், சோப் மூலம் அடிக்கடி கை கழுவவும், கைகளால் கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடக்கூடாது எனவும் கூறப்படுகிறது. தும்மல் மற்றும் மூச்சுத்தினறல் உள்ளவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் தள்ளி நிற்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மலிவு விலை மருந்து கடைகளான மக்கள் மருந்தகங்கள் மூலம் பயனடைந்தவர்கள் மத்தியில், காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது கொரோனா குறித்த வதந்திகளை நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், கை குலுக்குவதை தவிர்த்து, நமஸ்தே கூறுங்கள் என்றார். மருத்துவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் மருந்துகளுக்குப் பதில், பொதுவான மருந்துகளை பரிந்துரைப்பதற்கு, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.