கொரோனா வைரஸ்

இஸ்ரேலில் பரவுகிறதா புதிய கொரோனா திரிபு? அறிகுறிகள் என்ன?

JustinDurai

இஸ்ரேலில் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளிடம் புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை வேகப்படுத்தி, முகக்கவசம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று முன்னோடியாக இருந்த இஸ்ரேல் நாட்டில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸின் ஓமைக்ரான் திரிபின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வைரஸாக உருமாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய திரிபுகள் இன்னும் உலகம் முழுவதும் அறியப்படவில்லை என்றும் இவை காய்ச்சல், தலைவலி மற்றும் தசைநார் சிதைவு போன்ற லேசான அறிகுறிகளையே உண்டு பண்ணுகின்றது எனவும் இஸ்ரேல் அரசாங்கம் கூறியுள்ளது.

இதையும் படிக்கலாம்: சீனாவை மீண்டும் அதிரவைக்கும் புதிய திரிபு கொரோனா... மக்கள் அச்சம்