கொரோனா வைரஸ்

‘ஸ்க்விட் கேம்’ இணையத் தொடரை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு கொடுத்த இந்திய ரயில்வே

EllusamyKarthik

இந்திய ரயில்வே கொரோனா தொற்றை விரட்டி அடிக்கும் நோக்கில் அவ்வப்போது விழிப்புணர்வு கொடுத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலக அளவில் பரவலான மக்களின் கவனத்தை பெற்றுள்ள இணையத் தொடரான ஸ்க்விட் கேமை ரெஃபரென்ஸாக பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு சமூக வலைத்தள போஸ்ட் மூலம் கொரோனா விழிப்புணர்வு கொடுத்துள்ளது ரயில்வே. 

அதோடு இந்த விழிப்புணர்வு போஸ்ட்டில் கொரோனாவை விரட்டுவதற்கான மூன்று முக்கிய விதிகளை குறிப்பிட்டுள்ளது ரயில்வே. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துவது என்பதே ரயில்வே சொல்லியுள்ள அந்த விதிகள். 

அதோடு 2 மீட்டர் இடைவெளி விடுவதையும் படம் மூலம் விளக்கியுள்ளது ரயில்வே. அது மட்டும் இந்தியில் GAZ என Phonetic பாணியில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு சமூக வலைத்தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்ததையும் கமெண்ட் பிரிவில் பார்க்க முடிந்தது.