கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு; புதிதாக 3,43,144 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு; புதிதாக 3,43,144 பேருக்கு தொற்று உறுதி!

JustinDurai

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37 லட்சத்து 4 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 3 லட்சத்து 44 ஆயிரத்து 776 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 கோடியே 92 லட்சத்து 98 ஆயிரத்து 584 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.