கொரோனா வைரஸ்

அதிகரிக்கும் கொரோனா பரவல்: தடுப்பூசி, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும் கேரளா

Veeramani

கேரளாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையையும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே தினசரி கொரோனா தொற்று அதிகம் பதிவாகும் கேரளாவில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக கேரளாவில் தினசரி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தியதுடன் அங்கு தடுப்பூசி செலுத்துவதையும் அதிகப்படுத்தி உள்ளது. இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரளாவில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேலான கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.