கொரோனா வைரஸ்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 42 பேர் உயிரிழப்பு

JustinDurai

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,257 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் இன்று மட்டும் 18,257 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,553 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,29,68,533 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் கொரோனாவுக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,428 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தினசரி சதவீதம் 4.22 ஆகவும், வாராந்திர சதவீதம் 4.08 ஆகவும் உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த சதவீதம் 98.50 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.20 ஆகவும் உள்ளது.

நேற்று மட்டும் 10,21,164 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,98,76,59,299 கோடி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகும் கர்ப்பம் - ஆய்வில் வெளியான தகவல்