தமிழகத்தில் நேற்று 1,985 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவந்த நிலையில், சில மாவட்டங்களில் சிறிது சிறிதாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், நேற்று 1,985 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 1,969 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1,969 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,839 ஆகவும் உள்ளது. அதேபோல் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20,286 ஆக உள்ள நிலையில், சிகிச்சையில் இருந்த 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,39,487 ஆக உள்ளது. ஜூலை 29ஆம் தேதி 181 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஜூலை 30-ல் 215 என அதிகரித்து பிறகு ஏற்றமும் இறக்கமுமாக இருந்த எண்ணிக்கை இன்று 194 ஆக இருக்கிறது.
கோவையில் மொத்த பாதிப்பு 2,30,928 பேர். ஜூலை 29-ல் 188 ஆக இருந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்று 223ஆக உள்ளது.