கொரோனா வைரஸ்

மூன்றாவது தடுப்பூசி அவசியமில்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Sinekadhara

இந்தியாவில் கொரோனா 3வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவியல் ரீதியான அவசியம் எதுவும் இப்போதைக்கு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தலைவர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இந்தியாவில் மூன்றாவது தவணை தடுப்பூசி தேவை என்பதற்கு அறிவியல் ரீதியான அவசியம் தற்போதைக்கு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய் தடுப்புப் பிரிவுத் தலைவர் சமிரன் பாண்டா கூறியுள்ளார். தகுதி வாய்ந்த அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதுதான் தற்போதைய இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.