வார்த்தைகள் உணர்த்த முடியாததை ஒரு காட்சி உணர்த்திவிடும் என்பார்கள். இந்தியாவின் கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர இந்த காட்சியை காணுங்கள்.
நாம் திரையில் காணும் இந்தக் ஒரு காட்சி போதும் இந்தியாவின் கொரோனா பாதிப்பை உணர்த்தவே. எனக்கெல்லாம் கொரோனா வராது. வந்தா பார்த்துக்கலாம் என அலட்சியமாக கூறுபவர்கள் நிச்சயம் காண வேண்டிய காட்சி இது.
சுற்றிலும் குடியிருப்புகள் அதன் நடுவே அமைந்துள்ள தகன மையம் ஓய்வில்லாமல் இயங்கி வருகிறது. டெல்லியின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த தகன மையத்தில் 24 மணி நேரமும் உடல்கள் கொண்டு வரப்படுவதும் எரிக்கப்படுவதாகவும் இருக்கிறது. டெல்லியில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது தான் நிலைமை.
இங்கு பற்றி எரிவது உடல்கள் மட்டுமல்ல தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தை, சகோதரன், நண்பன் என நெருங்கிய பலரை கொரோனாவுக்கு பலி கொடுத்து அவர்களுக்கு முறையாக இறுதிச் சடங்கு கூட செய்யமுடியவில்லையே முகத்தை கூட காணமுடியவில்லையே என ஏங்கும் பல இந்தியர்களின் உள்ளமும்தான்.
கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட கொடியதாக இருக்கிறது என்பதற்கு இந்தக் காட்சிகளே சாட்சி.