கொரோனா வைரஸ்

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

Sinekadhara

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.3000-ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம், தற்போது ரூ.1200ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அதன்படி, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.