கொரோனா வைரஸ்

அத்தியாவசியப் பொருள்களின் விலை 30% உயர்வு

அத்தியாவசியப் பொருள்களின் விலை 30% உயர்வு

jagadeesh

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக வணிகர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதும், பொருட்களை உற்பத்தியாகும் இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று மத்திய சென்னை வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் சாமுவேல்.

அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தியிருக்கும் அச்சம் காரணமாக, பொதுமக்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பது விலையேற்றத்திற்கு முதன்மை காரணம் எனவும் அதனை குறைத்து தேவையான பொருட்களை வாங்கினால் மட்டுமே விலையை கட்டுக்குள் வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 22 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.