கொரோனா வைரஸ்

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டம்: கனடாவில் அவசரகால நிலை பிரகடனம்

நிவேதா ஜெகராஜா

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக கனடாவின் ஓட்டாவா நகரில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எல்லைகளை கடந்து செல்லும் லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என்ற அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து கடந்த 29-ம் தேதி லாரி ஓட்டுநர்கள் ஓட்டோவா நகரை சென்றடைந்தனர். அன்று முதல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளதால் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக கூறி ஓட்டாவா நகர மேயர் அவசரகாலநிலை பிரகடனம் செய்துள்ளார்.

ஓட்டாவா நகரின் முக்கிய பகுதிகளில் லாரிகளை நிறுத்தியும் கூடாரங்களை அமைத்தும் இவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். சைரன்களை அடித்தும், பட்டாசு வெடித்தும் நூதன முறையில் லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருவதால் ஓட்டாவா நகர நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.