கொரோனா வைரஸ்

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா 3ஆம் அலையின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன: ஐசிஎம்ஆர்

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா 3ஆம் அலையின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன: ஐசிஎம்ஆர்

Veeramani

வரவிருக்கும் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகள் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கொண்டு காணலாம் என்று  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) டாக்டர் சமிரான் பாண்டா கூறினார்.

இது தொடர்பாக பேசிய அவர், "கொரோனா மூன்றாம் அலை வருவதற்கு நமக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருப்பதாக நாம் நினைக்கக்கூடாது. இப்போதே சில மாநிலங்களில் நாம் ஆரம்ப அறிகுறிகளை காண்கிறோம். இனிவரும் பண்டிகை காலங்களின் போது, கோவிட் குறித்த சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அந்த பண்டிகைகள் கொரோனா வைரஸ் சேகரிப்பு மையமாக மாறி அவை சூப்பர் ஸ்பெரடர் நிகழ்வுகளாக செயல்படும்" என்று அவர் கூறினார்.

இரண்டாவது அலையுடன் ஒப்பிடும்போது மூன்றாவது அலையின் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்ட டாக்டர் பாண்டா, தீவிரமான இரண்டாவது அலைகளைக் காணாத மாநிலங்களுக்கு சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு தேவை என்று கூறினார், 'ந்த மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்கக்கூடாது' என்றும் கூறினார்.