கொரோனாவிற்கு ஒருபோதும் சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடி உலகளவில் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனாவிற்கு ஒருபோதும் சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரொஸ் அதானோம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், தற்போது கொரோனாவை தடுப்பதற்காக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளன.
ஆனாலும் தற்போதைக்கு அவை துல்லியமான தீர்வுகளை தரக்கூடியதாக இல்லை. மாஸ்க், தனிமனித இடைவெளி, கைகளைசுத்தமாக கழுவுதல், பரிசோதனை ஆகியவற்றை உலக நாடுகள் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்