கேரளாவில் இன்று ஒரேநாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 3 நாட்களாக 30 ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கேரளாவில் இன்று ஒரேநாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்தவர்களில் 179 பேர் இன்று மரணமடைந்துள்ளனர்.
ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் 3-வது நாளாக பாதிப்பு அதிகரித்திருக்கிறது. கேரளாவில் ஏற்கெனவே 30,007ஆக இருந்த பாதிப்பு இன்று 32 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து 18,573 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கைகள் எழுந்துவருகிறது.