கொரோனா வைரஸ்

இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் 2.5 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,47,417 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 1.9 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இன்று பாதிப்பு 27% என அது உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து, கொரோனா சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கை 11,17,531 என்று உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதத்தை பொறுத்தவரை, அது 95.59% என்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84,825 பேர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,47,15,361 என்று உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 69.73 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினசரி கொரோனா உறுதியாவோர் எண்ணிக்கை, 13.11% என்றாகியுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை பொறுத்தவரை, இதுவரை மொத்தம் 5,488 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதாகவும், 2,162 பேருக்கு தொற்று குணமானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உதவும் பேராயுதமான தடுப்பூசி விநியோகமும் இந்தியாவில் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.