கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனம் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை, தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும், கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவது அவசியம் என்றும் டெட்ரோஸ் அறிவுறுத்தினார். இதையடுத்து வரும் வாரத்தில் 14,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை 120 நாடுகளுக்கு அனுப்பி வைக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது.