சிங்கப்பூரை பயமுறுத்தும் கோவிட் தொற்று web
கொரோனா வைரஸ்

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தகவல்!

ஹாங் காங், சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரித்துவருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா..

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் படிப்படியாக குறையத் தொடங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த சூழலில் ஹாங் காங், சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கம் ஆசியாவின் மற்ற நாடுகளிலும் இருக்குமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.