கொரோனா வைரஸ்

12ஆவது மெகா முகாமில் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

12ஆவது மெகா முகாமில் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Veeramani

தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கனமழைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற12ஆவது மெகா முகாம் மூலம்16லட்சத்து 5ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 

தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தெளிவுபடுத்திய அமைச்சர், மழைக்காலம் என்பதால் காய்ச்சி வடிகட்டிய நீரை அனைவரும் பருக வேண்டும் என அறிவுறுத்தினார்.