தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றிற்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த சில தினங்களாக நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று மட்டும் 1989 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றிற்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இறந்துள்ளனர். உயிரிழந்துள்ளவர்களில் இருவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆக இதுவரை 397 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், எவ்வித இணை நோய்களும் இல்லாத 7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 6ம் தேதி முதல் சுமார் 34 பேர் இணை நோய்கள் இல்லாமல் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.