கொரோனா வைரஸ்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : புதிய உச்சமாக ஒரே நாளில் 1,26,789 பேர் பாதிப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : புதிய உச்சமாக ஒரே நாளில் 1,26,789 பேர் பாதிப்பு

Veeramani

இந்தியாவில் ஒரே நாளில் 1,26,789 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 685 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,66,177 -லிருந்து 1,66,862 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 9,01,98,673 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 59,258 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,92,135 –லிருந்து 1,18,51,393 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,10,319 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா முதல் அலையின்போது 2020 செப்.17-ல் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்ததும், 6 மாதங்களுக்குப் பின் கொரோனா 2ஆம் அலையில் ஏப்ரல் 5-ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,03,558 ஆக உயர்ந்தது. நேற்று(ஏப்ரல்-7)  ஒருநாள் பாதிப்பு 1,15,736 ஆக அதிகரித்த நிலையில் இன்று புதிய உச்சமாக 1,26,789 பேர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள். 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.