தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 2ஆம் நாளாக 1000க்கும் கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 990 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,15,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 973 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 109 ஆக குறைந்திருக்கிறது.
கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,157 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,147ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,114 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,57,282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.