கோவையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழக கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு, கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 13 சோதனைச் சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.