கொரோனா வைரஸ்

தஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா உறுதி

தஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா உறுதி

webteam

தஞ்சாவூர் எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் அமைச்சர் பெருமக்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் தற்போது  தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே பேராவூரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராசு, ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசந்திரன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 

தற்போது தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளருமான டி.கே.ஜி. நீலமேகத்துக்கு (வயது 51)  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.