கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதியானது.
திமுக எம் எல் ஏ செங்குட்டுவனுக்கு காய்ச்சல், சளி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையானது 12 யைத் தாண்டியுள்ளது. முன்னதாக அமைச்சர்களான அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.