கொரோனா வைரஸ்

கொரோனா: சென்னையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

கொரோனா: சென்னையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு

webteam

சென்னையில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் 4.40,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.