நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புள்ள மாநிலமாக உள்ள கேரளாவில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தே நீடிக்கிறது.
கேரளாவில் கடந்த 27 ஆம்தேதி 22 ஆயிரத்து 129 பேருக்கும், 28 ஆம்தேதி 22,056 பேருக்கும், 29 ஆம்தேதி 22,064 பேருக்கும், 30ஆம் தேதி 20 ஆயிரத்து 772 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் நேற்று மட்டும் 116 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மலப்புரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகி வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம் மாவட்டங்களில் தினசரி ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவாகிறது. இந்நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும்முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.