கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தீவிரமாக கவனிக்க தனிக்குழுவை அமைக்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியிருக்கும் கடிதத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவிவரும் வேகம், கடந்த 70 நாட்களில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் இந்தியாவிலும் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுவதை காட்டுவதாகவும், இதனால் மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தீவிர கண்காணிப்புடன் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தால் அதற்கு சிகிச்சைக்காகவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாகவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.