கொரோனா வைரஸ்

கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Sinekadhara

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதாக என முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு சற்றே அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா அல்லது தளர்வுகளை வழங்குவதா என்பது குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலை தொற்று ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. ஆக்ஸ்ட் 9ஆம் தேதிவரை கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கையைப் பொருத்து அந்தந்த மாவட்ட அதிகாரிகளே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள முதல்வர் அனுமதி வழங்கியிருக்கிறார்.

மூன்றாம் அலையைத் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.