கொரோனா வைரஸ்

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள்: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

நிவேதா ஜெகராஜா

ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் சென்னையில் உள்ள கட்டளை அறை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வரும் வார் ரூம் எனப்படும் கட்டளை அறை மூலம் அனைத்து மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருந்துகள் இருப்பு போன்ற தகவல்களை பெற்று, தொடர்பு கொள்ளும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டளை அறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஆம்புலன்ஸ் சேவை, 108 கட்டுப்பாட்டு அறை, ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்பு கிடங்குகளையும் அவர் ஆய்வு செய்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Omicron?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Omicron</a> தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ள அதேவேளையில், அஞ்சுவது அஞ்சலே அறிவார்ந்த செயல் என்பதால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் DMS வளாகத்தில் ஆய்வு செய்தேன். <a href="https://t.co/RUMnkj54fZ">pic.twitter.com/RUMnkj54fZ</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1475049794900934656?ref_src=twsrc%5Etfw">December 26, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.