கொரோனா வைரஸ்

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா தொற்று - இன்றைய முழுநிலவரம்!

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா தொற்று - இன்றைய முழுநிலவரம்!

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 1,728 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று 1,594 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு கூடுதலாக பதிவாகியுள்ளது.

இன்று பாதிப்பு உறுதியானவர்களில், பெரும்பான்மையோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மொத்தம் 876 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 158 பேருக்கும், கோவையில் 105 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக யாருக்கும் இன்று ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதிப்பு உறுதியானவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டிலிருந்து பயணப்பட்டவர் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 662 பேர் மீண்டுள்ளனர். இதன்மூலம் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 10,364 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 27,05,696 என்றாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து, இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,796 என்றாகியுள்ளது. இன்று இறந்தவர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனையையும், 5 பேர் அரசு மருத்துவமனையையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.