கொரோனா வைரஸ்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

Sinekadhara

கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 6 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் மெட்ரோ ரயில் 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவையும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு நாளை முதல் மெட்ரோ சேவை இரவு 9 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பீக்' அவர்ஸ் எனப்படும் மக்கள் அதிகம் கூடும் நேரமான காலை 8.30 முதல் 10.30 வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளிக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பயணச்சீட்டு வாங்கும்முறை, தனிமனித இடைவெளி மற்றும் சில விதிமுறைகளுடன் ரயில் சேவை இயங்கும்.