கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10 மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவை தவிர அனைத்தையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.