கொரோனா வைரஸ்

ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா?: பரிசோதிக்க அனுமதி

ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசிகள் செலுத்தலாமா?: பரிசோதிக்க அனுமதி

Veeramani

ஒருவருக்கு இரு வேறு நிறுவனங்களின் தடுப்பூசியை இரு தவணைகளில் போட்டால் பலன் இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய மருந்துக்கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஒருவருக்கு ஒரே நிறுவனத்தின் தடுப்பூசிகளே இரு தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு தவணைகளில் வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்துவதால் பலன் இருக்கிறதா என ஆராய உள்ளதாகக் கூறி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து 300 தன்னார்வலர்களிடம் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரு வேறு தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்யப்பட உள்ளது.