கொரோனா வைரஸ்

கொரோனா இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் - WCD அறிக்கை

Sinekadhara

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தி WCD மற்றும் WHO வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்று உறுதியானாலும்கூட தாய்மார்கள் கட்டாயம் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளனர். அம்னோட்டிக் திரவம் அல்லது தாய்ப்பால் மூலம் கொரோனா தொற்று பரவுவதில்லை என உறுதிசெய்துள்ளனர்.

எனவே ஏற்கனவே தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் தாய்மார்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களும் சுகாதார ஆலோசகர்களின் வழிகாட்டுதல்படி கட்டாயம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

குழந்தைகளை தொடுவதற்கு முன்னும் பின்னும் தாய்மார்கள் சோப்பு அல்லது சானிடைசரால் கைகளை சுத்தம் செய்யவேண்டும். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் கப், பாட்டில்களை கையாளுவதற்கு முன்பு சுத்தமாக கைகளைக் கழுவவேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தாய்ப்பால்தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு கொடிய நோய்களிடமிருந்தும் காப்பாற்றுகிறது. எனவே தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம்வரை எவ்வளவு முக்கியமானது என்பதை கருத்தில்கொண்டு, தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.