கொரோனா வைரஸ்

இரவு நேர ஊரடங்கு: அவசரத் தேவைகளுக்காக ஆட்டோக்களை அனுமதிக்க கோரிக்கை

Sinekadhara

தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, இரவு நேரத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதால், அனைத்து வாகனங்களும் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனார். கடன்களை கட்டமுடியாமல் தவிப்பதால், இரவு நேரத்தில் வரும் பேருந்து, ரயில் பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளை முதல் இரவு நேர வாகன இயக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இரவு 10 முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் நிலையில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இந்த புதிய நடைமுறை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்டோ ஒட்டுனர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.

'ஏற்கெனவே கொரோனா நெருக்கடியான காலம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இரவு நேரத்தில் கிடைக்கும் ஒரு சில வருமானம் கூட தற்போது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ புதுப்பித்தல், மாத இ.எம்.ஐ உள்ளிட்ட சிரமம் இருக்கிறது.அதேபோல் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்' என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.