கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 5 நிறுவனங்களின் உற்பத்தி உட்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.
பயன்படுத்தப்படாத கொரோனா தடுப்பூசிகள் எவ்வளவு காலம் கழித்து காலாவதியாகும்? ஒருவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பை அளிக்கும்? என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி ஒன்பது மாதங்களும் கோவாக்சின் 12 மாதங்களும் கெடாமல் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்தானா என்பது பற்றி நிபுணர்கள் குழு ஆய்வை தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
இதனைப்படிக்க...”மத்திய அரசு போதியளவு கோமாரி நோய் தடுப்பூசியை தரவில்லை”- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்