கொரோனா வைரஸ்

1500 முகக் கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய தையல் தொழிலாளி

1500 முகக் கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய தையல் தொழிலாளி

webteam


ஈரோடு தையல் தொழிலாளி ஒருவர் தனது சொந்த செலவில் 1500 முகக் கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பெரும்பாலான கடைகளில் முகக் கவசங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. 

அதனால் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான ஆனந்த் என்பவர் தனது சொந்த
செலவில் பனியன் துணியிலான 1500 முகக் கவசங்களை தயாரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்த முகக் கவசங்களை பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்து சென்றனர்.