கொரோனா வைரஸ்

12 மாவட்டங்களில் 10-க்கும் கீழ் தொற்று எண்ணிக்கை-மீண்டும் 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

12 மாவட்டங்களில் 10-க்கும் கீழ் தொற்று எண்ணிக்கை-மீண்டும் 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Sinekadhara

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று 962 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 945 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,14,043 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 945 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 112 ஆக அதிகரித்திருக்கிறது. 12 வயதுக்குட்பட்ட 72 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 15 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,191 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,012ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,047 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,59,407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.