கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒரேநாளில் 9,195 பேருக்கு கொரோனா உறுதி: ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்வு

Sinekadhara

இந்தியாவில் ஒரேநாளில் 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 781ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நேற்று 6,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 9,195ஆக அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,47,99,691லிருந்து 3,48,08,886ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரேநாளில் 7,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,43,945லிருந்து 3,42,51,292ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.40%. உயிரிழப்பு விகிதம் 1.38%ஆக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,80,290லிருந்து 4,80,592ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77,002 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 241 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 540 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக டெல்லியில் 238, மகாராஷ்டிராவில் 167, குஜராத்தில் 73 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் 65, தெலங்கானாவில் 62, ராஜஸ்தானில் 46, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 143.15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரேநாளில் 64,61,321 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.