இந்தியாவில் இதுவரை 43,70,128 பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 89,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,115 பேர் இறந்துள்ளனர்.
33,98,844 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 73,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 42,80,422 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 24 மணிநேரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய மாநிலங்களில் 20,131 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 6,743 பாதிப்புகளுடன் உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்திலும், 5,684 பாதிப்புகளுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும், 3,609 பாதிப்புகளுடன் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவை அடுத்து அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.