இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கோரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 லிருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் 40, 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,816 லிருந்து 27, 497 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 681 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,00,087 ஆக உயர்ந்துள்ளது.