இந்தியாவில் ஏற்பட்டுள்ள 50% மரணங்கள், கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட இணை பிரச்னைகளால் நேரிட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் தொடர்பாக ஐ சி எம் ஆர் அமைப்பு நாடு முழுவதிலும் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில், அதிகப்படியான நோயெதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதால் பாக்டீரியா, பூஞ்சை வகைகளால் ஏற்படக்கூடிய பிற விளைவுகளாலும் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரின் உடலில் பிற நோய்த்தொற்றுகள், இணை நோய்களின் அதீத பாதிப்பின் காரணமாகவே மரணங்கள் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.