கொரோனா வைரஸ்

பிற நோய்ப் பாதிப்பு எதுவுமில்லை : சென்னையில் 38 வயது நபர் கொரோனாவால் மரணம்..!

பிற நோய்ப் பாதிப்பு எதுவுமில்லை : சென்னையில் 38 வயது நபர் கொரோனாவால் மரணம்..!

webteam

சென்னையில் மற்ற நோய்ப் பாதிப்பு எதுவும் இல்லாத 38 வயது நபர் கொரோனாவால் உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு மட்டுமின்றி, கொரோனா மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 38 வயது நபர் 3 நாட்கள் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாகவும், 2 நாட்களாக மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறி கடந்த 30ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு படிப்படியாக உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டு, பின்னர் சுவாச செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வேறு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையில் மட்டும் இன்று 1,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 14,732 பேர் சிகிச்சை பலன்பெற்றுக் குணமடைந்துள்ளனர். அத்துடன் 13,906 சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளனர்.