கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 28,864 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து நாட்களாக குறைந்து வருகிறது. சுமார் 493 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். அதே போல 32,982 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 3,05,546 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தலைநகர் சென்னையில் 2,689 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இந்த எண்ணிக்கை 3537-ஆக உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி மாதிரியான மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
16,238 ஆண்களும், 12,626 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.