கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Sinekadhara

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 15,30,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 28,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று சனிக்கிழமையைவிட 14.3 சதவீதம் குறைந்துள்ளது. அதவாது பாதிப்பு எண்ணிக்கை 6,565 குறைந்திருக்கிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,36,921 ஆக உள்ளது.

24 மணிநேரத்தில் 338 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,42,655ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 34,848 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,24,09,345ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 97.51 சதவீதமாக உள்ளது

இதில் அதிகப்படியாக கேரளாவில் 20,487 பேருக்கும், தமிழ்நாட்டில் 1,639 பேருக்கும், ஆந்திராவில் 1,145 பேருக்கும், மிசோரத்தில் 1,089 பேருக்கும், கர்நாடகாவில் 801 பேருக்கும் தொற்று பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் இன்று பதிவான பாதிப்பு எண்ணிக்கையில் 88% பேர் இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக 71.66% கேரளாவில் மட்டும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 72,86,883 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 73,82,07,378 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்திய மக்கள்தொகையில் 59.5% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 18.6 % பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.