கொரோனா வைரஸ்

தொலைத்தொடர்பில் 24X7 சேவை: கொரோனா அச்சம், மன அழுத்தம் குறைக்கும் இளம் மருத்துவப்படை!

Veeramani

கொரோனோ உறுதி செய்யப்பட்டவர்களின் அச்சத்தையும் மன உளைச்சலையும் போக்க தொலைதொடர்பு மூலம் மன நலம் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி நம்பிக்கையை விதைத்து வருகிறார்கள் மதுரையை சேர்ந்த இளம் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள்.

கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மனப்பதற்றம் அடைந்துவிடுகிறார்கள். அச்சம் அடைகிறார்கள். காரணம் கொரோனா 2 ஆம் அலையின் தீவிரத்தன்மையும் பாதிப்புகளும் தான். இப்படி அச்சம் அடைவோரின் மன அழுத்தத்தை போக்கவும், வழிகாட்டவும், மதுரையில் இலவச ஆலோசனை மையம் இயங்கி வருகிறது.

10 இளம் மருத்துவர்கள், 2 அனுபவம் மிக்க மருத்துவர்கள், 2 ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

குழுவில் உள்ள அனைத்து மருத்துவர்களும் கொரோனோ களப்பணியில் இருந்து கொண்டே கிடைக்கும் நேரங்களை ஒதுக்கி அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

7448376060 எண்ணிற்கு அழைத்தால் அனைத்துவித சந்தேகங்கள், கேள்விகளுக்கும் பதில் கூறி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வத்துடன் மக்களின் அச்சத்தை போக்கும் இந்த இளம் மருத்துவப்படையினரின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் பலரை பயத்தில் இருந்து மீட்டு, நோயில் இருந்து மீளும்வரை உதவி வருகிறது. இந்த கொடுங்காலத்தில் இப்படிப்பட்ட சேவைகளும், இனிய உள்ளங்களும் வாழ்த்திற்குரியவையே!