சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை, சென்னையில் 21 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 12 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.