தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 60-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.
1,33,962 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 1901, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் என கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,39,277 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 12 வயதிற்குட்பட்ட 113 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 30 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,782 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாத 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 26,717ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,439 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,78,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.